Monday, September 13, 2021

ரயில் பயணம்

 அது ஒரு ரயில்பயணம்...

காசி வழியாய் சென்னை நோக்கி....


காசியில் நம்மவர்கள் ஒரு குழுவாய் ஏறினார்கள். அந்தனக்குடும்பத்தவர்களாய் இருந்தனர்.


பொதுவாய் பேசியபடி பயணம் தொடர்ந்த்து....


அவரே கேள்வி எழுப்பினார்...

மோதி அரசு எப்படி..??

மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதா..??


என்பன

கேள்வியாய்

இருப்பினும்


முடிவையும்

அவரே வைத்திருந்தார்.


அனைத்தும்

அமோகமாக

இருப்பதாய்.


பெரியார்

பற்றியும்

தொட்டார்..


" அன்று சாமி இல்லையென்றார்

இன்று எவ்வளவு கூட்டம்.."


என்பன போன்று.


முழுவதுமாய்

80 நிமிடங்கள்

பிரசங்கத்தை மீறிய

பிரசங்கமாய்


கோர்வையாய்

தொடர்ச்சியாய்

ஒன்றன்பின் ஒன்றாய்

அடுக்கடுக்காய்

ஆதாரங்களோடு


80 நிமிட

என்

பதிலுறையின் பின்


அவரின் மொழி இப்படியாய் இருந்த து

.

.

.

" ஆனானப்பட்ட

அத்வானியவே ஓரங்கட்டுன மோதி நல்லவனாவா இருக்கப்போறான்..."


எனக்காய் சொன்னாரா

புரிந்து மருதளித்தாரா

நானறியேன்.


என்றாலும்


60 வயதை கடந்தவராயிருந்தாலும்

பெரியாரை புரிந்தவரல்லர்.


அவரின் கூற்றுப்படி வைக்கத்துல பொறந்த மலையாளி என்றே கூறினார்..


" பெரியார், கோவில் வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் தமிழகத்தில் ஒற்றை கோவில் இருந்திருக்காது. "


"என்கேள்விக்கு பதில் சொல் என்றே அவர் பயணித்தார். பகுத்தறிவு என்ற பாதையில் பயணிக்கச்சொன்றார் என்று பாடமெடுக்கவேண்டியதாய் போனது."


எனக்கு மனநிறைவை தந்த உரையாடல் பயணமாய் அமைந்த து.


##


எதிர்மறை கருத்திற்க்கு ஒதுங்காது

அதே சமயம் அவர்கள்

மனம் கோனாமல்


இடம் அறிந்து 

உதாரணங்கள் புகுத்தி 

தொடர்ச்சியாய் 


என்னாலும்  

பேசமுடியும்


 என்பதை

எனக்கு

உணர்த்திய


பயணம்.


# காசி ரயில் பயணம்

# பெரியார்

# பிராமணர்களின் புரிதல்


Saturday, September 11, 2021

விநாயகர்

 விநாயகர் சதுர்த்தி


நிறைவாய் கொண்டாடி மகிழ்ந்தாயிற்று. என்றாலும் கூட யாரிந்த விநாயகர் என்ற சிந்தை மறையவில்லை.


               பாலகுமாரன் சொல்லுவார், அது ஒரு உருவகம். யானை பொறுமையான விலங்கு. திடமான விலங்கு. புத்திகூர்மை, நிதானம், செயல்திறம் போன்றவற்றிற்க்கான குறியீடு என்று  கூறுவார். 


              இனியொருபுறம்.., சோழன் ( பிற்காலச்சோழன் - சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ) மராட்டியத்தின் மீது படையெடுத்து வென்று வரும்போது வித்தியாசமான யானைத் தலையும் மனித உடலும் கொண்ட , மராட்டிர்களின் வழிபாட்டு சிலையை எடுத்து வந்து இங்கு வழிபட ஆரம்பித்தான் என்பதாயும் ஒரு கதை.


               இனியும் ஒருபுறம் , விநாயகர் புராண கதைகளின் வழியே தெய்வமாகியவர். அவருக்கென்று ஏன் தனிக்கோவில்கள் இல்லை. 

மூத்தோன், தமிழ்கடவுள் என்றெல்லாம் போற்றப்படுகின்ற கணபதிக்கு தனிக்கோவில் ஏன் இல்லை...?? ஆக, தினிக்கப்பட்ட கடவுள் விநாயகர்.


நிற்க.


                கணபதி, விநாயகர், விக்னேஷ்வர் போன்ற பெயர்கள் புத்தருக்கு உண்டு. யானை புத்தரோடு தொடர்புடைய விலங்கு.


                  ( அவர் பிறப்பதற்க்கு முன் அவரின் தாயாரின் கனவில் வெள்ளையானை தோன்றி அவரின் வயிற்றினுள் சென்றதாக கூறியிருக்கிறாராம். )


                  புத்தரின் மறைவிற்க்குப்பின் பௌத்த பிட்சுக்கள் தேசமெங்கும் பயணித்து 

பௌத்தத்தை,

கல்வியை,

மருத்துவத்தை


கற்பித்து, செய்து வந்திருக்கின்றனர்.

பிட்சுக்கள் பிச்சை யெடுத்து உயிர் வாழ வேண்டும். ஊருக்கு வெளியே தங்கிக்கொள்ள வேண்டும் என்பன போன்ற சட்ட திட்டங்களும் உண்டு. பிட்சுக்கள், தங்களின் குரு வான புத்தரை வழிபட அவரை குறிக்கும் 

யானை,

சக்கரம்

பாதம்

போன்ற அடையாளங்களை ஆங்காங்கே நிறுவி வழிபட்டிருக்கின்றனர்.

பௌத்தத்தையும், சமணத்தையும் ஒழித்தவர்கள் மக்களின் வழிபாட்டில் இருந்தவைகளை சமயோசிதமாக திசை திருப்பி பிள்ளையாராக்கி விட்டனர்.


           அதிலும் பாலகங்காதரர் போன்றோர் தேசிய விடுதலை ( சனாதன தர்மத்தை மீட்டெடுப்பதே அவரின் விடுதலை என்பது மற்றொரு உண்மை ) என்று செயல்பட்டவர்கள் , வீட்டினுள் இருந்த விநாயகரை தெருவிற்க்கு கொண்டு வந்து நீர் நிலைகளில் கரைப்பதை வழக்கமாக்கி விட்டனர். 

( ஏன் இந்த பழக்கம் சிவனுக்கும், விஷ்னுவிற்க்கும் இல்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. )


      ஆக, எவ்வழி போகினும் விநாயகர் என்பது வெளிச்சம் இல்லா இருள் பாதையாகவே உள்ளது.


குறிப்பு :-


         பல பண்டைய நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்போர் புத்தனை நினைத்துக்கொள்ளவும். அது விநாயகர் அல்லர்.


# விநாயகர் சதுர்த்தி

# வரலாறு

Wednesday, July 28, 2021

இரவு வணக்கம்.

இரவுகள் தினமும்

விஜயம் செய்கின்றன...!!

பகல்களும் படுத்துவிடாமல் 

விஜயம் செய்கின்றன...!!


உறங்கியநாம்

துயில் நீத்தோமா..??

நம் துயர் தீர்த்தோமா...??



ஏதும் செய்யாது

துயின்றோம்..

துயில் நீத்தோம்..

உழன்றோம்..

உண்டோம்..

உறங்கினோம்...

மீண்டும்.. மீண்டும்...


துயர துயில் வணக்கங்களுடன்..

- நான் -


#இரவு வணக்கம்

#தமிழ் கவிதை

#ரகுபதிராஜா





இரவு வணக்கம்

 ஒவ்வொரு நாளும் நிலவால் முடிகிறது.....


ஒவ்வொரு இரவும்

சூரியனால் விடிகிறது...


விடியும்

எனும்

நம்பிக்கை

நம்மை

ஒவ்வொரு

நாளும்

உயிர்ப்பிக்கிறது.


இரவு வணக்கங்களுடன்


- நான் -


# இரவு வணக்கம்

# தமிழ் கவிதை



Tuesday, June 29, 2021

தளர்வுகள்

 இரண்டாம் அலை முடிவிற்க்கு வந்துவிட்டது...


டெல்டா வைரஸ் என்பது கொராணா வை விட வேகமாய் பரவும்.


அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மையுடையது...


கொராணா வால் உயிரிழப்பு குறைவு. ( அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழப்பு பற்றி அறிவிக்கப்படவில்லை )


டெல்டா ப்ளஸ் என்பது டெல்டா வை விட வேகமாய் பரவும் தன்மையுடையது.


அதிக உள் உறுப்புகளை பாதிக்கக்கூடியதாம்.


இந்தியாவிலும் டெல்டா ப்ளஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்திலும் டெல்டா ப்ளஸ் நோயாளிகள் உள்ளனர்.


முதல்வர் ரூ நூறு கோடி 3 வது அலைக்கு ஒதுக்கியுள்ளார்.


# இவைகள் யாவும் சமீபத்திய செய்திகள்.


# தளர்வுகள் 

தடை கற்களாய்

ஆகாது பார்த்துக்கொள்வோம்.


# 3 ம் அலை கொரானா

# தளர்வுகள்

Sunday, June 27, 2021

தமிழ் நாட்டு வரலாறு

 பல்வேறு வகையான 

கதைகளை கேட்டதால், உண்மையான வரலாறு


என்னவென்று

தெரிந்துகொள்வோம் 

என கடந்த சில நாட்களாய்...


" தமிழ் நாட்டு வரலாறு "


ஓடிக்கொண்டுள்ளது....


பல்வேறு சுவாரஸ்யங்கள்

பொதிந்தே இருக்கின்றன.

முடித்தபின்

தொடரலாம்...

அவனும் நானும்...

 மறுங்க மறுங்க

பார்க்கும்

பார்வை......


அலைபாயும்

கருவிழிகள்......


உச்சபட்ச

பீதியில்

உள்ளம்.....


( அட போடா என்னவேணா ஆகட்டும்...)


**

அவனும்

நானும்

ஒன்றே....


எனினும்


அவன்

வேறு.....


நான்

வேறு.....


**

தாயை

இழந்தால்


தனிக்கட்டை தான்....


தந்தையும்

இல்லையாயின்


அனாதைதான்....


எனும்

பாலபாடம்

புரியா

பாலகனாய்....


ஆயிரம்

முறை 

அனைத்து வழிகளில்


உணர்த்திட முயன்றாலும்


ஏனோ அவன்


இன்னும்....


இன்னும்......


தூரமாய்

என்னில் இருந்து.


**

தீர்க்க வழியிருந்தும்

தீர்க்கமுடியா.....


பேச முடிந்தும்

பேசா......


உங்களைப் போல

நானும்


சாட்சியாய்

மட்டும்...


ஒரு ஓரமாய்

நின்றபடி.....