அது ஒரு ரயில்பயணம்...
காசி வழியாய் சென்னை நோக்கி....
காசியில் நம்மவர்கள் ஒரு குழுவாய் ஏறினார்கள். அந்தனக்குடும்பத்தவர்களாய் இருந்தனர்.
பொதுவாய் பேசியபடி பயணம் தொடர்ந்த்து....
அவரே கேள்வி எழுப்பினார்...
மோதி அரசு எப்படி..??
மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதா..??
என்பன
கேள்வியாய்
இருப்பினும்
முடிவையும்
அவரே வைத்திருந்தார்.
அனைத்தும்
அமோகமாக
இருப்பதாய்.
பெரியார்
பற்றியும்
தொட்டார்..
" அன்று சாமி இல்லையென்றார்
இன்று எவ்வளவு கூட்டம்.."
என்பன போன்று.
முழுவதுமாய்
80 நிமிடங்கள்
பிரசங்கத்தை மீறிய
பிரசங்கமாய்
கோர்வையாய்
தொடர்ச்சியாய்
ஒன்றன்பின் ஒன்றாய்
அடுக்கடுக்காய்
ஆதாரங்களோடு
80 நிமிட
என்
பதிலுறையின் பின்
அவரின் மொழி இப்படியாய் இருந்த து
.
.
.
" ஆனானப்பட்ட
அத்வானியவே ஓரங்கட்டுன மோதி நல்லவனாவா இருக்கப்போறான்..."
எனக்காய் சொன்னாரா
புரிந்து மருதளித்தாரா
நானறியேன்.
என்றாலும்
60 வயதை கடந்தவராயிருந்தாலும்
பெரியாரை புரிந்தவரல்லர்.
அவரின் கூற்றுப்படி வைக்கத்துல பொறந்த மலையாளி என்றே கூறினார்..
" பெரியார், கோவில் வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் தமிழகத்தில் ஒற்றை கோவில் இருந்திருக்காது. "
"என்கேள்விக்கு பதில் சொல் என்றே அவர் பயணித்தார். பகுத்தறிவு என்ற பாதையில் பயணிக்கச்சொன்றார் என்று பாடமெடுக்கவேண்டியதாய் போனது."
எனக்கு மனநிறைவை தந்த உரையாடல் பயணமாய் அமைந்த து.
##
எதிர்மறை கருத்திற்க்கு ஒதுங்காது
அதே சமயம் அவர்கள்
மனம் கோனாமல்
இடம் அறிந்து
உதாரணங்கள் புகுத்தி
தொடர்ச்சியாய்
என்னாலும்
பேசமுடியும்
என்பதை
எனக்கு
உணர்த்திய
பயணம்.
# காசி ரயில் பயணம்
# பெரியார்
# பிராமணர்களின் புரிதல்
No comments:
Post a Comment