Tuesday, June 29, 2021

தளர்வுகள்

 இரண்டாம் அலை முடிவிற்க்கு வந்துவிட்டது...


டெல்டா வைரஸ் என்பது கொராணா வை விட வேகமாய் பரவும்.


அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் தன்மையுடையது...


கொராணா வால் உயிரிழப்பு குறைவு. ( அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழப்பு பற்றி அறிவிக்கப்படவில்லை )


டெல்டா ப்ளஸ் என்பது டெல்டா வை விட வேகமாய் பரவும் தன்மையுடையது.


அதிக உள் உறுப்புகளை பாதிக்கக்கூடியதாம்.


இந்தியாவிலும் டெல்டா ப்ளஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்திலும் டெல்டா ப்ளஸ் நோயாளிகள் உள்ளனர்.


முதல்வர் ரூ நூறு கோடி 3 வது அலைக்கு ஒதுக்கியுள்ளார்.


# இவைகள் யாவும் சமீபத்திய செய்திகள்.


# தளர்வுகள் 

தடை கற்களாய்

ஆகாது பார்த்துக்கொள்வோம்.


# 3 ம் அலை கொரானா

# தளர்வுகள்

Sunday, June 27, 2021

தமிழ் நாட்டு வரலாறு

 பல்வேறு வகையான 

கதைகளை கேட்டதால், உண்மையான வரலாறு


என்னவென்று

தெரிந்துகொள்வோம் 

என கடந்த சில நாட்களாய்...


" தமிழ் நாட்டு வரலாறு "


ஓடிக்கொண்டுள்ளது....


பல்வேறு சுவாரஸ்யங்கள்

பொதிந்தே இருக்கின்றன.

முடித்தபின்

தொடரலாம்...

அவனும் நானும்...

 மறுங்க மறுங்க

பார்க்கும்

பார்வை......


அலைபாயும்

கருவிழிகள்......


உச்சபட்ச

பீதியில்

உள்ளம்.....


( அட போடா என்னவேணா ஆகட்டும்...)


**

அவனும்

நானும்

ஒன்றே....


எனினும்


அவன்

வேறு.....


நான்

வேறு.....


**

தாயை

இழந்தால்


தனிக்கட்டை தான்....


தந்தையும்

இல்லையாயின்


அனாதைதான்....


எனும்

பாலபாடம்

புரியா

பாலகனாய்....


ஆயிரம்

முறை 

அனைத்து வழிகளில்


உணர்த்திட முயன்றாலும்


ஏனோ அவன்


இன்னும்....


இன்னும்......


தூரமாய்

என்னில் இருந்து.


**

தீர்க்க வழியிருந்தும்

தீர்க்கமுடியா.....


பேச முடிந்தும்

பேசா......


உங்களைப் போல

நானும்


சாட்சியாய்

மட்டும்...


ஒரு ஓரமாய்

நின்றபடி.....